Log in Register

Log in

 

NetsLogo.jpg

சிகுள் - நெட்ஸ் குழந்தைகள் விழா 2015

நவம்பர் 7 ஆம் தேதி, 2015 சனிக்கிழமை மாலை 2.30 மணி

Keefe Tech School,

750 Winter Street, Framingham, MA - 01702.



நிகழ்ச்சி விதிமுறைகள் :



நுழைவுச் சீட்டு:

  • சங்க உறுபினர்களுக்கு அனுமதி இலவசம்.
  • உறுப்பினர் அல்லாதவர்கள் ஒருவருக்கு $5.
  • ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
  • நிகழ்ச்சியில் பங்கேற்க சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.



பங்கேற்பாளர்கள் கட்டணம்:

வ.எண்

நிகழ்ச்சி பெயர்

பங்கேற்பாளர் கட்டணம் (உறுபினர்களுக்கு)

பங்கேற்பாளர் கட்டணம்(உறுப்பினர் அல்லாதவர்களுக்கு )

போட்டி

விருதுகள்

1

மாறுவேட நிகழ்ச்சி

$15

$20

இல்லை

நெட்ஸ் பங்கேற்பாளர் கோப்பை

2.

தனித்திறன் வெளிப்பாடு

$15

$20

இல்லை

நெட்ஸ் பங்கேற்பாளர் கோப்பை

3

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

இலவசம்

இலவசம்

ஆம்

வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதல்.பங்கேற்றவர்களுக்கு சான்றிதல் மட்டும்

4.

தமிழ் நாடகம்

$20

$25

இல்லை

நெட்ஸ் பங்கேற்பாளர் கோப்பை

5.

தமிழ் எங்கள் மூச்சு (தமிழ்ப் பேச்சு, செய்யுள் ஒப்புவித்தல் )

$15

$20

இல்லை

நெட்ஸ் பங்கேற்பாளர் கோப்பை

6

தமிழ் இசை

$20

$25

இல்லை

நெட்ஸ் பங்கேற்பாளர் கோப்பை.

7

வார்த்தை விளையாட்டு

இலவசம்

இலவசம்

இல்லை

நெட்ஸ் பங்கேற்பாளர் கோப்பை மற்றும் சான்றிதல்

8

தமிழ் நடனம்

$20

$25

இல்லை

நெட்ஸ் பங்கேற்பாளர் கோப்பை



2015 அக்டோபர் 18 ஆம்தேதிஇரவு 10 மணிக்குள்பதிவுசெய்துகொள்ளவேண்டும். அதன்பின்பதிவுநிறுத்தப்படும்



  1. மாறுவேடநிகழ்ச்சி

               அனைத்து நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக தமிழில் இருக்க வேண்டும்.இசை தேவைப்படின் அனுப்பவும்.



  • மாறுவேட நிகழ்ச்சியில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் கலந்துகொள்ளலாம்.கண்டிப்பாக மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 5 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் தனித்திறன் வெளிப்பாட்டில் தான் பங்கேற்க்க முடியும்.
  • முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்

2. தனித்திறன்வெளிப்பாடு

               அனைத்து நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக தமிழில் இருக்க வேண்டும்.இசை தேவைப்படின் அனுப்பவும்.

  • திறன் வெளிப்பாடு நிகழ்ச்சியில் பதினாறு வயதிற்குட்பட்ட அனைவரும் பங்கு பெறலாம்.கண்டிப்பாக ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பங்கேற்பாளர்களின் செயல்திறன்கள் இருக்க வேண்டும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்
  • தனித்திறன் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் திருக்குறள் போட்டி, தமிழ் எங்கள் மூச்சு, வார்த்தை விளையாட்டு தவிர வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது.



3. திருக்குறள்ஒப்புவித்தல்போட்டி:

  • ஐந்து முதல் பனிரெண்டு வயதிற்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொள்ளலாம்
  • வயது வரம்பிற்கு ஏற்றாற்போல் குறுப்பிட்ட குறல்கள் மனனம் செய்ய வழங்கப்படும் .
  • ஒவ்வொரு வயதினர்க்கும் வழங்கப்பட்ட குறள்களிலிருந்து எதாவது சில ஒப்புவிக்க கேட்கப்படும்.
  • எத்தனை குறள்கள் ஒவ்வொருவரும் ஒப்புவிக்க வேண்டும் என்பதை நடுவர்கள் முடிவு செய்வர்
  • ஒவ்வொரு வயதினர்க்கும் ஓரு சுற்று மட்டுமே இருக்கும்
  • திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு உறுதி மின்னஞ்சல் அனுப்பப்பட மாட்டா.பதிவு செய்பவர்கள் போட்டியில் கலந்து கொள்வதாக உறுதி செய்து கொள்ளப்படும்.

 

  • வயது 5 & 6 :
  • மனனம் செய்வதற்கு ஒரு அதிகாரம் தரப்படும்.
  • அதிகாரம் -(கடவுள் வாழ்த்து)(1-10)
  • திருக்குறளின் முதல் சீர் கொடுக்கப்பட்டு முழு குறளும் கேட்கப்படும்
  • முதல் மூன்று இடங்களுக்குள் மிகுந்த போட்டி இருந்தால் குறளின் ஈற்றுச்சீர் கொடுக்கப்பட்டு முழுக்குறளும் கேட்கப்படும்
  • வயது 7 & 8 :
  • மனனம் செய்வதற்கு இரண்டு அதிகாரம் தரப்படும்
  • அதிகாரம்-(அறிவுடைமை )(421-430)
  • அதிகாரம்-(வான்சிறப்பு)(11-20)
  • திருக்குறளின் முதல் சீர் கொடுக்கப்பட்டு முழு குறளும் கேட்கப்படும்
  • முதல் மூன்று இடங்களுக்குள் மிகுந்த போட்டி இருந்தால் குறளின் ஈற்றுச்சீர் கொடுக்கப்பட்டு முழுக்குறளும் கேட்கப்படும்
  • வயது 9 - 12:
  • மனனம் செய்வதற்கு இரண்டு அதிகாரம் தரப்படும்
    • அதிகாரம்-(ஈகை)(221-230)
    • அதிகாரம்- (விருந்தோம்பல்)(81-90)
      • திருக்குறளின் முதல் சீர் அல்லது ஈற்றுச்சீர் கொடுக்கப்பட்டு முழு குறளும் கேட்கப்படும்
      • முதல் மூன்று இடங்களுக்குள் மிகுந்த போட்டி இருந்தால் குறளின் பொருள் கேட்கப்படும்



திருக்குறளை கீழே தரப்பட்டுள்ள இணைய முகவரியில் பார்த்துக்கொள்ளலாம்          http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0001.html

      


  ** நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது!

4. தமிழ்எங்கள்மூச்சு(தமிழ்ப்பேச்சு,செய்யுள்ஒப்புவித்தல்)

                அனைத்து நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக தமிழில் இருக்க வேண்டும்.

  • இந்நிகழ்ச்சியில் போட்டி கிடையாது. தமிழ் எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் தமிழ்ப் பேச்சு, செய்யுள் ஒப்புவித்தல், கவிதை சொல்லுதல் ஆகியவைகளை உள்ளடக்கியது. தமிழ் இலக்கியங்களிலிருந்து செய்யுள் தேர்வு செய்து கொள்ளலாம்
  • தமிழ்பேச்சு பதினாறு வயதிற்குட்பட்ட அனைவரும் பங்கு பெறலாம்.தமிழில் எந்த தலைப்பையும் தேர்ந்தெடுக்கலாம்.கண்டிப்பாக ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • தமிழ் எங்கள் மூச்சு நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்



5. வார்த்தை விளையாட்டு


  • இந்நிகழ்ச்சியில் போட்டி கிடையாது
  • ஆறு முதல் பதினாறு வயதிலான குழந்தைகள் மட்டும் பங்கு பெறலாம்
  • சீரற்றதேர்வு முறையில் நான்கு அணிகள் தேர்ந்தெடுக்கப்படும்
  • இந்தவிளையாடிற்கான வழிகாட்டியை நெட்ஸ் வழங்கும்
  • வார்த்தைவிளையாட்டு நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்

 

 

போட்டி வகை மற்றும் வடிவம்

 

கீழ்கண்ட பலவகைப் பிரிவுகளின் கீழ் “Jeopardy” முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

 

  • படித்தல் - வார்த்தைகள் அல்லது சிறிய வாக்கியம் தகுந்த உச்சரிப்பில் படிக்க வேண்டும்.குழந்தைகளின் வயதுக்கேற்ப கேட்கப்படும். படிக்க வேண்டியவை பாடத்திட்டத்தில் உள்ள மற்றும் இல்லாத வார்த்தைகளும் கேட்கப்படும்.

  • மொழிபெயர்ப்பு - தமிழில் கொடுக்கப்படும் வார்த்தைகளின் ஆங்கிலப்பொருளும், ஆங்கிலத்தில் கொடுக்கப்படும் வார்த்தைகளின் தமிழாக்கமும் கூறவேண்டும்.

  • எதிர் சொல்

  • புகைப்படத்தில் உள்ளதை அடையாளம்காண்

  • கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைக்கு இணையான வார்த்தையை கூறவேண்டும்.

  • தேடிப்பிடி - எழுத்துக்களை மாற்றி அமைத்து சரியான வார்த்தையை கண்டுபிடி.

  • பழமொழிகளை வைத்து கோடிட்ட இடங்களை நிரப்பு.

  • எதுகை சொற்கள்

  • குறில் நெடில் - இதன் ஆங்கிலப்பொருளும் கேட்கப்படும்

  • வார்த்தைகளை இணைத்து கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தில் வாக்கியம் அமைக்க வேண்டும்.

  • போட்டி அதிகமாக இருந்தால் பாடத்திட்டத்தில் இல்லாத வார்த்தைகளும் கேட்கப்படும்.

  • சில கேள்விகள் தவிர ஒவ்வொரு கேள்விக்கும் சரி சமமான மதிப்பெண்கள் அளிக்கப்படும். ஒரு சில கேள்விகளுக்கு இரு மடங்கு மதிப்பெண்களும் ஒரு சில கேள்விகளுக்கு மூன்று மடங்கு மதிப்பெண்களும் அளிக்கப்படும்.

  • பதில் 30 வினாடிகளுக்குள் கூறவேண்டும்.

  • ஒரு அணி தவறான விடை கூறும் பட்சத்தில் அடுத்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த அணியும் 30 வினாடிகளுக்குள் விடை அளிக்க வேண்டும்.

  • தவறான விடைக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படமாட்டது.

  • NETS குழு அணைத்து அணிகளுக்கும் ஓரளவுக்கு சரி சமமான கேள்விகள் கேட்க்கும்படி முயற்சி செய்யும்.

  • இந்த விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம் இருப்பின் போட்டி தொடங்குவதற்கு முன் மேடையில் அறிவிக்கப்படும்.

 

பாடத் திட்டதிற்கு இங்கே சொடுக்கவும்.

 

6. தமிழ் இசை: (புதிது)



  • இந்நிகழ்ச்சில் போட்டி கிடையாது
  • இசை உள்ளடக்கிய எந்த விதமான பாடல்களும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் (தொன்மை, பிறவகை அல்லது திரைப்படப் பாடல்கள் )
  • ஆறு முதல் பதினாறு வயதிலான குழந்தைகள் மட்டும் பங்கு பெறலாம்
  • தனியாக பாட அனுமதி இல்லை. குறைந்தது மூன்றுபங்கேற்பாளர்கள் இருக்க வேண்டும்.அணியினரின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.
  • குழுவாக பாட நீங்கள் கற்றுகொள்ளும் ஆசிரியரை அணுகவும்
  • ஒவ்வோர் குழுவிற்கும்(தனிக்குழு/ இசைப்பள்ளிக் குழு) 10 நிமிடங்கள் கொடுக்கப்படும்.
  • இதில் பங்கேற்பவர்கள் திருக்குறள் போட்டி, தமிழ் எங்கள் மூச்சு, வார்த்தை விளையாட்டு தவிர வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது.

7. தமிழ் நாடகம்: (புதிது)

  • இந்நிகழ்ச்சில் போட்டி கிடையாது
  • செயல்திறன் தமிழில் இருக்க வேண்டும்
  • ஆறு முதல் பதினாறு வயதிலான குழந்தைகள் மட்டும் பங்கு பெறலாம்
  • குறைந்தது ஐந்து பங்கேற்பாளர்கள் இருக்க வேண்டும்.அணியினரின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.
  • இதில் பங்கேற்பவர்கள் திருக்குறள் போட்டி, தமிழ் எங்கள் மூச்சு, வார்த்தை விளையாட்டு தவிர வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது.

8. தமிழ் நடனம்: (புதிது)

  • இந்நிகழ்ச்சில் போட்டி கிடையாது
  • செயல்திறன் தமிழில் இருக்க வேண்டும்
  • ஆறு முதல் பதினாறு வயதிலான குழந்தைகள் மட்டும் பங்கு பெறலாம்
  • நடனம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒன்றிலிருந்து இருக்க வேண்டும் (தொன்மை, பிறவகை அல்லது திரைப்படப் பாடல்கள் )
  • கரகாட்டம், ஒயிலாட்டம்,கும்மி,காவடி ஆட்டம் , பொய்க்கால் குதிரை போன்றவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
  • தனியாக ஆட அனுமதி இல்லை. குறைந்தது மூன்று பங்கேற்பாளர்கள் இருக்க வேண்டும்.அணியினரின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை
  • குழுவாக ஆட நீங்கள் கற்றுகொள்ளும் ஆசிரியரை அணுகவும்
  • ஒவ்வோர் குழுவிற்கும்(தனிக்குழு/ நடனப்பள்ளிக்   குழு) 10 நிமிடங்கள் கொடுக்கப்படும்
  • இதில் பங்கேற்பவர்கள் திருக்குறள் போட்டி, தமிழ் எங்கள் மூச்சு, வார்த்தை விளையாட்டு தவிர வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது.

    பதிவு செய்தல்& பணம் செலுத்துதல் :

          விண்ணப்ப படிவங்களை இணையத்தில் பதிவு செய்யும் முறையை அறிமுக படித்தினோம். அதன் விளைவாக பதிவுப் படிவங்களை குறைந்த காலத்தில் பெற்று செயலாக்க முடிந்ததது.

இதே முறைமையை பின்பற்றி உங்கள் விண்ணப்ப படிவங்களை இணையத்தில் பதிவு செய்து பணம் செலுத்தவும்..இணையவழி பதிவு செய்ய, கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை சொடுக்குங்கள்.



http://www.netamilsangam.org/



இதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.விரைந்து பதிவு செய்து கொள்ளுங்கள்.



மேலே இருக்கின்ற அனைத்து விதிமுறைகளும் NETS செயற்குழுவின் மாற்றங்களுக்கு உட்பட்டது.



** உறுப்பினர் அல்லாதவர்கள் பதிவு செய்ய: :நீங்கள்உறுப்பினராகஇல்லாமல்இருப்பினும், நமதுவலைத்தளத்தில்இலவசகணக்குஒன்றுபதிவுசெய்துஅதன்மூலம்நிகழ்சிகளின்பதிவைமேற்கொள்ளலாம்.



2015 அக்டோபர் 18 ஆம் தேதி இரவு 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின் இணையவழி பதிவு நிறுத்தப்படும்.இம்முறை வழி மட்டுமே பதிவு செய்ய முடியும். வாய்வழி, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழி விண்ணப்பங்கள் செயற்குழு உறுபினர்களுக்கு அனுப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது.



உங்களுடைய செயல்திறன் நிகழ்ச்சிக்கு இசை தேவைப்படின், அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இசைக்கோப்பு mp3 அல்லது wav நீட்சி கொண்டதாக இருக்க வேண்டும்



***கவனிக்க:இசைக்கோப்புகளை பிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டாம்.இந்நிகழ்ச்சிக்கான தன்னார்வலர்கள் அனைத்து இசைக்கொப்புகளையும் திரட்ட இந்த மின்னஞ்சல் முகவரியை மட்டும்தான் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள் .



- அனைத்து பதிவுப்படிவங்களும் செயலாக்கப்பட்ட பிறகு, NETS செயற்குழு உங்கள் பதிவிற்காண உறுதியை மின்னஞ்சல் மூலம் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் அனுப்பிவிடும்.திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு உறுதி மின்னஞ்சல் அனுப்பப்பட மாட்டா.



-மேலே இருக்கின்ற அனைத்து விதிமுறைகளும் NETS செயற்குழுவின் மாற்றங்களுக்கு உட்பட்டது.



- உங்களுக்கு ஏதேனும் நிகழ்ச்சி குறித்த சந்தேகங்கள் இருந்தால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  என்றமுகவரிக்குதொடர்புகொள்ளவும்.



அன்புடன்,



NETS செயற்குழு

 

 

 
Thanks to our sponsors