Log in Register

Log in

logo_1nos copy (1).jpg

நெட்ஸ் சித்திரை  விழா - 2018

 

பதிவு விதிமுறைகள்

சித்திரை விழா 2018 இல் அனைவரையும் பங்கேற்க நெட்ஸ் அன்புடன் அழைக்கிறது.

 

சூப்பர் சிங்கர் - நாட்டுபுற பாடல்கள்

 

** இந்நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை விரைவாக பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். மிக குறைந்த அளவு இடங்களே இருக்கின்றன!!.

பதிவுவழிகாட்டுதல்:

 

  • நிகழ்ச்சிக்காக பதிவுகள் தற்பொழுது நடைபெறுகிறது!!!!
  • முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • பங்கேற்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்சிகளில்  பங்கேற்கலாம்.·
  • நிகழ்ச்சிகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.   
  • நுழைவு கட்டணமும் நிகழ்ச்சி பங்கேற்பாளர் கட்டணமும் தனியாக வசூலிக்கப்படும்.

 

         சூப்பர் சிங்கர் இளைஞர்கள் - பங்கேற்பாளர் விதிமுறைகள்

 

 

  • இந்நிகழ்ச்சியில் 10 வயதில் இருந்து 16 வயதிற்குள் உள்ள குழந்தைகள்  பங்குபெறலாம்.
  • பங்கேற்பாளர் தமிழ் நாட்டுபுற ( மக்களிசை) பாடல்களை மட்டுமே பாட அனுமதிக்கப்படும்.
  • நிகழ்ச்சியில் குழுவாக பாட அனுமதி இல்லை. தனியாக பாட மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • ஒவ்வொரு பாடலும் 5 நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • நிகழ்ச்சியின் நடுவர் வெற்றியாளரை தீர்மானிப்பார்கள். நடுவரின் தீர்ப்பே இறுதியானது. இவ்விஷயத்தில் அனைவரின் ஒத்துழைப்பையும் தமிழ் சங்கம் கோருகிறது.
  • முதல், இரண்டு, மூன்று பரிசுகள் அறிவிக்கப்படும். நிகழ்ச்சியில் ஒரே பங்கேற்பாளர் கலந்துகொள்ளும் பட்சத்தில் வெற்றியாளர் அறிவிக்கபடாது பங்கேற்பாளர் கோப்பை  மட்டுமே வழங்கப்படும்.முதல், இரண்டு, மூன்று வெற்றியாளர்களை தவிற அனைவருக்கும் பங்கேற்பாளருக்கான கோப்பை வழங்கப்படும். கோப்பைகள் நிகழ்ச்சியின் இறுதியில் வழங்கப்படும்.
  • நிகழ்ச்சியில் பயன்படுத்தபடும் பாடல்களின் மெல்லிசை குறித்த தகவல்கள் முன்னரே This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு "NETS - Chithirai Vizhaa - Super Singer Details" என்ற தலைப்பில் அனுப்பவேண்டும்.
  • நீதிபதிகள் முடிவு இறுதியானதாக இருக்கும். அதனால் உங்கள் புரிதல் மற்றும் முழு ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

 

         சூப்பர் சிங்கர் பெரியவர்கள் (டூயட் மட்டும்)  - பங்கேற்பாளர் விதிமுறைகள்

 

  • இந்நிகழ்ச்சியில் 16 வயதிற்கும் மேற்பட்டவர்கள்  டூயட் பாடல்களில் பங்குபெறலாம்.
  • பங்கேற்பாளர் தமிழ் நாட்டுபுற பாடல்களை மட்டுமே பாட அனுமதிக்கப்படும்.
  • ஒவ்வொரு பாடலும் 5 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • நிகழ்ச்சியில் பயன்படுத்தபடும் பாடல்களின் மெல்லிசை குறித்த தகவல்கள் முன்னரே This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு "NETS - Chithirai Vizhaa - Super Singer Details" என்ற தலைப்பில் அனுப்பவேண்டும்.
  • நீதிபதிகள் முடிவு இறுதியானதாக இருக்கும். அதனால் உங்கள் புரிதல் மற்றும் முழு ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.
  • பங்கேற்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட டூயட் குழுக்களில் பங்கேற்க அனுமதிக்கபடாது. வெற்றி பெற்ற குழுக்களுக்கு மட்டும் பரிசுகள் வழங்கப்படும்.
  • முதல், இரண்டு மற்றும் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
  • அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதிற்கு கோப்பை வழங்கப்படும். வெற்றி பெற்ற குழுவிற்கு வெற்றி பெற்றதிற்கான கோப்பை வழங்கபடும்.

 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்சிகளில் பதிவு செய்ய ஏப்ரல் 22nd 2018 (ஞாயிறு ) இரவு 10:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். நெட்ஸ் இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டும். வேறு எந்த வகையில் பதிவு செய்யதாலும்  பதிவு ஏற்றுகொள்ளப்படாது .

நிகழ்சிகளில் பங்குபெற கட்டணத்தை ஏப்ரல் 23rd 2018 (திங்கள் ) இரவு 10:00 மணிக்குள்  இணையதளத்தின் மூலம் செலுத்தவேண்டும்.

உங்களது பதிவு மற்றும் கட்டணத்தை NETS குழு உறுதிபடுத்திய பிறகே பதிவை ஏற்றுக்கொள்ளபடும். இறுதி மின்னஞ்சல் உறுதிபடுத்தப்பட்ட அனைத்து பங்கேற்பாளர்கள் அனுப்பப்படும்.

 

நுழைவு கட்டணத்தை 23rd ஏப்ரல் 2018 ற்கு பிறகு திரும்ப பெற இயலாது. தனிப்பட்ட காரணங்களுகாக நிகழ்ச்சியில் இருந்து விலக வேண்டி வந்தால் 23rd  ஏப்ரல் 2018ற்குள் தெரிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட தேதிக்கு பிறகு கட்டணம் திரும்ப தரப்பட மாட்டது.

 

உங்கள் நிகழ்ச்சிக்கு இசை அல்லது பாடல்கள் தேவை என்றால், நீங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. இசை / பாடல் தகவல்களை  ஏப்ரல் 23rd 2018 (ஞாயிறு ) இரவு 10:00 மணிக்குள் MP3 வடிவத்தில் அனுப்ப வேண்டும்.

மேலே கொடுத்துள்ள விதிமுறைகள் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

                                                                                                   

***அனைத்து விதிமுறைகளும் NETS குழுவின் மாற்றத்திற்குட்பட்டது. முன் அறிவிப்பு இல்லாமல் எந்த நேரத்திலும் விதிகள் மற்றும் நிபந்தனைகளை மாற்ற / புதுப்பிக்க  NETS குழுவிற்கு அதிகாரமுள்ளது.

இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உங்களின் ஆதரவை தந்து நிகழ்ச்சியை வெற்றி பெறவைக்க வேண்டுகிறோம்.உங்களின் ஆதரவு விழாவினை வெற்றிகரமாக நடத்த மிக முக்கியமானது.

Thanks to our sponsors