-
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
-
ஐந்திலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
-
ஆழமறியாமல் காலை விடாதே.
-
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
-
இளங்கன்று பயமறியாது
-
ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
-
உள்ளது போகாது இல்லது வாராது.
-
ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
-
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
-
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
-
ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
-
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
-
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
-
ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
-
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்
-
ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க.
-
காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது
-
கோல் ஆட, குரங்கு ஆடும்.
-
சட்டி சுட்டதும், கை விட்டதும்
-
பசி வந்தால் பத்தும் பறக்கும்.
-
கரும்பை விரும்ப விரும்ப வேம்பு.
-
வாத்தியாரை மெச்சின பிள்ளை இல்லை.
-
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
-
குந்தித் தின்றால் குன்றும் மாளும்.
-
சுண்டக்காய் கால் பணம் சுமைகூலி முக்கா பணம்
-
மண்ணை குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
-
முன் கை நீண்டால் , முழங்கை நீளும்
-
ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
-
மதில் மேல் பூனை போல .
-
தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும்.