Log in Register

Log in

 

logo_1nos copy (1).jpg

நெட்ஸ் சித்திரை மற்றும் அன்னையர் தின கொண்டாட்டம்

பதிவு விதிமுறைகள்

சித்திரை விழா 2017 இல் உள்ளூர்  திறமையாளர்களை கீழ்கண்ட நிகழ்சிகளில் பங்கேற்க நெட்ஸ் அன்புடன் அழைக்கிறது.

 

·உறியடித்தல்,  சூப்பர் சிங்கர்,·  கோலப்போட்டி ·அன்னையர் ஆடை அலங்கார அணிவகுப்பு, நாடகம், பாரம்பரிய நடனம், கணக்கு மற்றும் அறிவியல் போட்டி.

 

** இந்நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை விரைவாக பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். மிக குறைந்த அளவு இடங்களே இருக்கின்றன!!.

 

பதிவுவழிகாட்டுதல்:

 

  • பதிவுகள் இப்பொழுது  ஆரம்பம் !!!!

  • முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • பங்கேற்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்சிகளில்  பங்கேற்கலாம்.·

  • நிகழ்ச்சிகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.    
  • பங்கேற்ப்பாளர்  கட்டணத்தில் நுழைவு கட்டணம் சேர்த்தி இல்லை.

 

உறியடித்தல் - பங்கேற்பாளர் விதிமுறைகள் :

இடங்கள் நிரம்பியவுடன் பதிவு நிறுத்தப்படும்.

  • பங்கேற்பாளர்கள் கட்டாயம்  NETS உறுப்பினராக இருக்க வேண்டும்.

  • 16 வயதுக்கு  மேற்பட்டவர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சில் பங்குபெற இயலும்.

  • அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் உறி, கைத்தடி மற்றும் கண் கட்டும் துணி கொடுக்கப்படும்..

  • பங்கேற்பாளர்களுக்கு மூன்று முறை வாய்ப்பு வழங்கப்படும்.

  • வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கான கோப்பை வழங்கப்படும்.

  • இந்த நிகழ்ச்சிக்கு குறைந்த இடங்களே இருக்கிறது. ஆதலால் ஏமாற்றத்தை தவிர்க்க விரைவில் பதிவு செய்க.

  • அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பங்கேற்ப்பிற்கான கோப்பை வழங்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தயவுசெய்து கோப்பையை பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.
 

 

சூப்பர் சிங்கர் குழந்தைகள் - பங்கேற்பாளர் விதிமுறைகள்

 

  • பங்கேற்பாளர்களின் பெற்றோர் ஒருவராயினும் கட்டாயம்  NETS உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

  • இந்நிகழ்ச்சியில் 7 வயதில் இருந்து 15 வயதிற்குள் உள்ள குழந்தைகள்  பங்குபெறலாம்.

  • பங்கேற்பாளர் தமிழ் திரைப்பட பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். குழுவாக பங்கேற்க அனுமதி இல்லை.தனியாக மட்டுமே பாட அனுமதிக்கப்படும்.

  • ஒவ்வொரு பாடலும் 5 நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

  • நிகழ்ச்சியில் பயன்படுத்தபடும் பாடல்களின் மெல்லிசை குறித்த தகவல்கள் முன்னரே This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு "NETS - Chithirai Vizhaa - Super Singer Details" என்ற தலைப்பில் அனுப்பவேண்டும்.

  • நீதிபதிகள் முடிவு இறுதியானதாக இருக்கும். அதனால் உங்கள் புரிதல் மற்றும் முழு ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

  • பங்கேற்பாளர்களை  வயதின் அடிப்படையில் குழுக்களாக பிரிக்கப்படும்.

  • ஒவ்வொரு குழுவிலும் ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு கோப்பை வழங்கப்படும்.

  • ஒவ்வொரு குழுவிலும் ஒரு பங்கேற்பாளர் மட்டுமே இருந்தால், வெற்றியாளர் என்று அறிவிக்க படாது.
  • அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதிற்கு கோப்பை வழங்கப்படும். வெற்றி பெற்றவருக்கு வெற்றி பெற்றதிற்கான கோப்பை வழங்கபடும்.
  • நிகழ்ச்சியின் இறுதியில் தயவுசெய்து கோப்பையை பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.

 

 

 

சூப்பர் சிங்கர் பெரியவர்கள் (டூயட் மட்டும்)  - பங்கேற்பாளர் விதிமுறைகள்

 

  • பங்கேற்பாளர்கள் கட்டாயம்  NETS உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

  • இந்நிகழ்ச்சியில் 16 வயதிற்கும் மேற்பட்டவர்கள்  டூயட் பாடல்களில் பங்குபெறலாம்.

  • பங்கேற்பாளர் தமிழ் திரைப்பட பாடல்கள் மட்டுமே பாட வேண்டும்.

  • ஒவ்வொரு பாடலும் 5 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • நிகழ்ச்சியில் பயன்படுத்தபடும் பாடல்களின் மெல்லிசை குறித்த தகவல்கள் முன்னரே This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு "NETS - Chithirai Vizhaa - Super Singer Details" என்ற தலைப்பில் அனுப்பவேண்டும்.

  • இந்நிகழ்ச்சிக்கு Fareedha மற்றும்  Hariharasudhan ஆகியோர் நீதிபதியாக  செயல்படுவர்.

  • நீதிபதிகள் முடிவு இறுதியானதாக இருக்கும். அதனால் உங்கள் புரிதல் மற்றும் முழு ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

  • பங்கேற்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட டூயட் குழுக்களில் பங்கேற்கலாம். வெற்றி பெற்ற குழுவிற்கு மட்டும் பரிசுகள் வழங்கப்படும்.

  • அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதிற்கு கோப்பை வழங்கப்படும். வெற்றி பெற்ற குழுவிற்கு வெற்றி பெற்றதிற்கான கோப்பை வழங்கபடும்.

  • நிகழ்ச்சியின் இறுதியில் தயவுசெய்து கோப்பையை பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.

 

 

 

 

கோலப்போட்டி - பங்கேற்பாளர் விதிமுறைகள்

 

இடங்கள் நிரம்பியவுடன் பதிவு செய்வது நிறுத்தப்படும்).

 

  • பங்கேற்பாளர்கள் கண்டிப்பாக  NETS உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

  • கோலப்போட்டி (வண்ண கோலங்கள்) 16 வயதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம்.

  • தனியாகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்க்கலாம். குறைந்த / அல்லது அதிகபட்ச குழு என்ணிக்கை கிடையாது.

  • கோலப்போட்டியில் அச்சு பயன்படுத்த கூடாது.

  • கோலம் போடுவதற்கான பொருட்கள் பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும்.

  • போட்டியில் 10 பங்கேற்பாளர்களுக்குள் இருந்தால் இரண்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும். 10 பங்கேற்பாளர்களுக்கு மேல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பட்சத்தில் 3 வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும்.

  • அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதிற்கு கோப்பை வழங்கப்படும்.

  • நிகழ்ச்சியின் இறுதியில் தயவுசெய்து கோப்பையை பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.

  • கோலங்கள் படைப்பு, வண்ணங்கள் மற்றும்  தெளிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.

 

 

அன்னையர் ஆடை அலங்கார அணிவகுப்பு :

 

விதிமுறைகள்

 

இடங்கள் நிரம்பியவுடன் பதிவு செய்வது நிறுத்தப்படும்).

 

  • பங்கேற்பாளர்கள் கண்டிப்பாக NETS உறுப்பினர்களாக இருக்க வேண்டும். போட்டியில் தாயும் சேயும் மேடையில் நடக்க வேண்டும்.

  • பங்கேற்பாளர்கள் கட்டாயம் தென் இந்திய பாரம்பரிய உடையில் நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும்.

  • இந்த நிகழ்ச்சிக்கு குறைந்த இடங்களே இருக்கிறது. ஆதலால் ஏமாற்றத்தை தவிர்க்க விரைவில் பதிவு செய்க.

  • இந்த நிகழ்ச்சி தாய்மார்களுக்கு ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியாகும்.

  • இந்த நிகழ்ச்சியில் இசை தேவைப்படுமாயின், உங்கள் அணிவகுப்பின் போது இசை ஒளிபரப்பப்படும்.

 

 

 

 

பாரம்பரிய நடனம்  - பங்கேற்பாளர் விதிமுறைகள்

 

(2 இடங்கள் மட்டுமே. இரண்டு பதிவுகள் வந்தவுடன்   பதிவு செய்வது நிறுத்தப்படும்)

 

  • பங்கேற்பாளரின் பெற்றோர்  கண்டிப்பாக NETS உறுப்பினர்களாக இருக்க  வேண்டும். 5வருட பாரம்பரிய நடனம் பயின்றவராக இருக்க வேண்டும்.

  • 12 வயது முதல் 16 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • இந்த நிகழ்ச்சியில் போட்டிகள் / வெற்றி பரிசுகள் கிடையாது.

  • பங்கேற்பாளர்களுக்கு 15 நிமிடம் கொடுக்கப்படும். அந்த 15 நிமிடத்தில் அவர்கள் வசதிக்கேற்ப இரண்டு / மூன்று பிரிவுகளாக நிகழ்ச்சிகளை தொகுத்து கொள்ளலாம்.

  • இந்த நிகழ்ச்சிக்கு குறைந்த இடங்களே இருக்கிறது. ஆதலால் ஏமாற்றத்தை தவிர்க்க விரைவில் பதிவு செய்க.

  • இரண்டு பங்கேற்பாளர்களை தேர்வு செய்யும் உரிமை NETS க்கு மட்டும் உண்டு.

 

 

 

 

நடனம் சிறப்பு விருந்தினர் பாடலுடன் - பங்கேற்பாளர் விதிமுறைகள்

 

(2 இடங்கள் மட்டுமே. இரண்டு பதிவுகள் வந்தவுடன்   பதிவு செய்வது நிறுத்தப்படும்)

 

  • பங்கேற்பாளர்களின் பெற்றோர் கண்டிப்பாக NETS உறுப்பினர்களாக இருக்க  வேண்டும்.

  • 10 வயது முதல் 16 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • சிறப்பு விருந்தினர்கள் பாடும் பொழுது பங்கேற்பாளர் மேடையில் நடனமாட அனுமதிக்கப்படுவார்கள்.

  • இந்த நிகழ்ச்சியில் போட்டிகள் / வெற்றி பரிசுகள் கிடையாது.

  • இந்த நிகழ்ச்சிக்கு குறைந்த இடங்களே இருக்கிறது. ஆதலால் ஏமாற்றத்தை தவிர்க்க விரைவில் பதிவு செய்க.

  • பங்கேற்பாளர்கள் 2-3 பாடல்களை முன்னரே தேர்வு செய்து NETS யிடம் கொடுக்கவேண்டும். அந்த பாடல்களில் இருந்து ஒரு பாடல் தேர்வு செய்து சிறப்பு விருந்தினர்கள் மேடையில் பாடுவார்கள்.

  • இரண்டு பங்கேற்பாளர்களை தேர்வு செய்யும் உரிமை NETS க்கு மட்டும் உண்டு

 

 

 

 

கணக்கு வினாடி வினா :

 

விதிமுறைகள்

 

இலவசம்.. !!! ( விழா நுழைவு கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும் )

 

  • முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

  • பதிவின் பொழுது குழந்தைகள் என்ன வகுப்பு என்பதை தெரியப்படுத்தவும்.

  • 30 முதல் 45 நிமிடங்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் 25 கேள்விகள் கேட்கப்படும். கணக்கு வினாடி வினாவிற்கான கேள்விகள் Mathnasium Acton என்ற நிறுவனத்தினரால் தேர்வு செய்யப்படும்.

  • அனைத்து கேள்விகளுக்கும் கொடுக்கப்படும் பதில்களில் இருந்து சரியான பதில்களை தேர்வு செய்யவேண்டும்.

  • முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் ஒவ்வொரு வகுப்பிலும் தேர்ந்தெடுக்கப்படும்.

  • வெற்றி பெற்றவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

  • பங்கேற்பாளர்களுக்கு பங்கேற்பிற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

  • கேள்விகளின் சரியான பதில்கள் நிகழ்ச்சியின் இறுதியில் வழங்கப்படும்.

  • வெற்றியாளர்கள் விழாவின் இறுதியில் அறிவிக்கப்படும்.

 

 

 

அறிவியல் வினாடி வினா :

விதிமுறைகள்

இலவசம்.. !!! ( விழா நுழைவு கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும் )

  • முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

  • பதிவின் பொழுது குழந்தைகள் என்ன வகுப்பு என்பதை தெரியப்படுத்தவும்.

  • 30 முதல் 45 நிமிடங்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் 25 கேள்விகள் கேட்கப்படும்.

  • அனைத்து கேள்விகளுக்கும் கொடுக்கப்படும் பதில்களில் இருந்து சரியான பதில்களை தேர்வு செய்யவேண்டும்.

  • முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் ஒவ்வொரு வகுப்பிலும் தேர்ந்தெடுக்கப்படும்.

  • வெற்றி பெற்றவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

  • பங்கேற்பாளர்களுக்கு பங்கேற்பிற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

  • கேள்விகளின் சரியான பதில்கள் நிகழ்ச்சியின் இறுதியில் வழங்கப்படும்.

  • வெற்றியாளர்கள் விபரம் விழாவின் இறுதியில் அறிவிக்கப்படும்.

 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்சிகளில் பதிவு செய்ய ஏப்ரல் 30th 2017 (ஞாயிறு ) இரவு 10:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். நெட்ஸ் இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டும். வேறு எந்த வகையில் பதிவு செய்யதாலும் பதிவு ஏற்றுகொள்ளப்படாது .

நிகழ்சிகளில் பங்குபெற கட்டணத்தை ஏப்ரல் 30th 2017 (ஞாயிறு ) இரவு 10:00 மணிக்குள்  இணையதளத்தின் மூலம் செலுத்தவேண்டும்.

உங்களது பதிவு / கட்டணத்தை NETS குழு உறுதிபடுத்திய பிறகே பதிவை ஏற்றுக்கொள்ளபடும். இறுதி மின்னஞ்சல் உறுதிபடுத்தப்பட்ட அனைத்து பங்கேற்பாளர்கள் அனுப்பப்படும்.

 

நுழைவு கட்டணத்தை 30th ஏப்ரல் 2017 ற்கு பிறகு திரும்ப பெற இயலாது. தனிப்பட்ட காரணங்களுகாக நிகழ்ச்சியில் இருந்து விலக வேண்டி வந்தால் 30th  ஏப்ரல் 2017 ற்குல் தெரிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் குறிபிட்ட தேதிக்கு பிறகு கட்டணம் திரும்ப தரப்பட மாட்டது.

 

உங்கள் நிகழ்ச்சிக்கு இசை அல்லது ஒரு பாடல் தேவை என்றால், நீங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. இசை / பாடல் தகவல்களை  ஏப்ரல் 30th 2017 (ஞாயிறு ) இரவு 10:00 மணிக்குள் MP3 வடிவத்தில் அனுப்ப வேண்டும்.

மேலே கொடுத்துள்ள விதிமுறைகள் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

                                                                                                

***அனைத்து விதிமுறைகளும் NETS குழுவின் மாற்றத்திற்குட்பட்டது. முன் அறிவிப்பு இல்லாமல் எந்த நேரத்திலும் விதிகள் மற்றும் நிபந்தனைகளை மாற்ற / புதுப்பிக்க  NETS குழுவிற்கு  அதிகாரமுள்ளது.

இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உங்களின் ஆதரவை தந்து நிகழ்ச்சியை வெற்றி பெறவைக்க வேண்டுகிறோம்.     

  

Thanks to our sponsors