Log in Register

Log in

 

 

  

 

header2

 

பிப்ரவரி 3 ஆம் தேதி, 2018 சனிக்கிழமை மாலை 1:30 மணி

(பனிப்பொழிவு இருப்பின் மாற்று தேதி  

பிப்ரவரி 10 ஆம் தேதி, 2017 சனிக்கிழமை மாலை 1.30 மணி)

லிட்டில்டன்  உயர்நிலைப் பள்ளி

56 கிங் ஸ்ட்ரீட், மசாசூசெட்ஸ் - 01460.

நிகழ்ச்சி விதிமுறைகள் :

 

நுழைவுச் சீட்டு:

 

சங்க உறுபினர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு அனுமதி இலவசம்.

உறுப்பினர் அல்லாதவர்கள் (ஐந்து வயதிற்கு மேற்பட்டோர்) ஒருவருக்கு $5.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.

 

சங்க உறுப்பினர்களுக்கான  தகவல்:

  • உறுப்பினர்களுக்கான வருடாந்திர காலம் ஜனவரி முதல் டிசம்பர் வரை. ஆதலால் உறுப்பினர்கள் தங்களது சந்தாவை புதிப்பித்துக்கொள்ளுங்கள்.

  • சென்ற ஆண்டு குழந்தைகள் தின விழாவில் உறுப்பினராய் பதிவு செய்தவர்களுக்கு இந்த ஆண்டுக்கான உறுப்பினர் கட்டணத்தில் தள்ளுபடி விலையில் 15$  ஒரு வருடத்திற்கான சந்தாவாகும்.

 

நிகழ்ச்சி பங்கேற்பாளர்க்கான தகவல்:

 

  • அனைத்து நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.

  • நிகழ்ச்சியில் பங்கேற்க சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தங்களது உறுப்பினர் நிலை செயலில் இல்லை என்றால் அதை புதுபிக்கவும்.

  • தனியாக ஆட அனுமதி இல்லை. அதற்கான கோரிக்கையை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

  • பதினாறு வயதுக்கு மேற்பட்டோர் இரண்டுபேர்  அல்லது அதற்கு மேற்பட்ட குழுவாக பங்கேற்கலாம். ஒருவராக பங்கேற்க இயலாது.

  • பதினைந்து வயதுக்கு உட்பட்டோர் மூன்றுபேர் அல்லது அதற்கு மேற்பட்ட குழுவாக பங்கேற்கலாம். ஒருவர் அல்லது இரட்டையராக பங்கு பெற இயலாது.

  • ஒருவர் அதிகபட்சமாக இரண்டு நிகழ்ச்சியில் மட்டும் தான் பங்கு பெற முடியும். இரண்டு நிகழ்ச்சியு,நிகழ்ச்சியும் வேறு வேறு வகைகளாக இருக்க வேண்டும்.

  • அணைத்து செயல்திறனுக்கும் அதிகபட்சமாக ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்படும்.

  • தங்கள் குழுவில் பத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மற்றும் செயல்திறனுக்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் தேவைபட்டால் நெட்ஸ் செயற்குழுவை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  என்ற மின்னஞ்சலில்தொடர்பு கொள்ளவும்.

  • இசைக்கோப்பு நேரம்  ஐந்து நிமிடத்திற்கு மேல் மிகுதியாக  இருப்பின் அதற்கு  மாற்று கோப்பு கிடைக்காவிடில் அதை தொகுபாக்கம் செய்ய நெட்ஸ் செயற்குழுவுக்கு உரிமை உள்ளது.

  • பொங்கல் விழாவிற்கு அதிக வரவேற்ப்பு இருப்பதால் பெருமளவான பங்கேற்பாளர்கள் பதிவு செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் முதலில் பதிவுசெய்பவருக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு  ஏற்றுகொள்ளப்படும். எனவே தொடக்கத்திலேயே  பதிவு செய்து ஏமாற்றத்தை தவிர்க்குமாறு கேட்டுகொள்கிறோம். பங்கேற்பாளர்கள் பற்றிய தேர்வில் நெட்ஸ் செயற்குழு முடிவே இறுதியானது.

 

பங்கேற்பாளர்கள் கட்டணம்:

        உறுப்பினர்களுக்கு : $15 ஒரு நபருக்கு

   உறுப்பினர் அல்லாதவர்களுக்கு : $20 ஒரு நபருக்கு

 

பதிவு செய்தல் & பணம் செலுத்துதல் :

2018 ஜனவரி 27 ஆம் தேதி ஞாயிறு இரவு 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின் இணையவழி பதிவு நிறுத்தப்படும்.இம்முறை இணையவழியாக மட்டுமே பதிவு செய்ய முடியும். வாய்வழி, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழி விண்ணப்பங்கள் செயற்குழு உறுபினர்களுக்கு அனுப்பினால் ஏற்றுகொள்ளபடமாட்டாது.

உங்களுடைய செயல்திறன் நிகழ்ச்சிக்கு இசை தேவைப்படின், 2018 ஜனவரி 28 ஆம் தேதிக்குள்

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இசைக்கோப்பு mp3 அல்லது wav நீட்சி கொண்டதாக இருக்க வேண்டும்.

 

 

***கவனிக்க: இசைக்கோப்புகளை பிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டாம். இந்நிகழ்ச்சிக்கான தன்னார்வலர்கள் அனைத்து இசைக்கோப்புகளையும் திரட்ட இந்த மின்னஞ்சல் முகவரியை மட்டும்தான் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள் .

பங்கேற்பாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் : 2018 ஜனவரி 27 ஆம் தேதி இரவு 10 மணி. இணையவழியாக மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.

 

2018 ஜனவரி 29ஆம் தேதிக்கு பிறகு கட்டணம் செலுத்த $5 அதிகமாக தாமத்திற்கான கட்டணமாக வசூலிக்கப்படும்.

 

2018 ஜனவரி 28 ஆம் தேதிக்கு பிறகு செயல்திறனை ரத்து செய்ய கோரி வரும் விண்ணப்பங்கள்  ஏற்றுகொள்ளபடமாட்டாது. அதற்கான கட்டணமும் திருப்பித்தர இயலாது.

கட்டணம் செலுத்தியபின் தங்கள் மின்னஞ்சலுக்கு வரும் பேபால் ரசீதே தங்களது பங்கேற்பை உறுதிசெய்யும்.

உங்களுக்கு ஏதேனும் நிகழ்ச்சி குறித்த சந்தேகங்கள் இருந்தால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

 

பொங்கல் விழா சிற்றேட்டில் விளம்பரம் செய்ய அல்லது நீங்கள் தமிழ்ச்சங்கத்துடன் சேர்ந்து பணியாற்ற விரும்பினால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

 

மேலே இருக்கின்ற அனைத்து விதிமுறைகளும் NETS செயற்குழுவின் மாற்றங்களுக்கு உட்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Thanks to our sponsors